கனடாவின் Toronto நகரில் உள்ள Little Italy பகுதியில், வழிப்போக்கர் ஒருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியைத் திருடிவிட்டு போலிச் சங்கிலியைப் போட்டுச் சென்ற நபரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று மாலை 5 மணியளவில் College மற்றும் Beatrice வீதிகளுக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் வந்த நபர் ஒருவர், வழியில் சென்றவரிடம் முகவரி கேட்பது போல நடித்து வாகனத்தை விட்டு வெளியே இறங்கியுள்ளார்.
பின்னர் அவரை ஆலிங்கனம் (கட்டிப்பிடித்தல்) செய்வது போல நடித்து, அவர் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிவிட்டுப் போலிச் சங்கிலியை மாற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் 30 முதல் 40 வயதுடைய, 5 அடி 8 அங்குல உயரமும் தடிமனான உடலமைப்பும் கொண்டவர் என்றும், அவர் Volvo XC60 ரக காரில் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை Toronto காவல்துறை முன்னெடுத்து வருவதுடன், தகவல்கள் தெரிந்தவர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
