2026 ஆம் ஆண்டில் Toronto பகுதியில் 29 கொலைச் சம்பவம் பதிவு- கொலையாளி கைது!

cp24

கனடாவின் Toronto நகருக்குட்பட்ட North York பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

North York பகுதியில் உள்ள Tangreen Court அடுக்குமாடி குடியிருப்பில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கத்திக்குத்தாக மாறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் Vaughan பகுதியைச் சேர்ந்த 57 வயதான Albert Gundran என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் Torontoவைச் சேர்ந்த 46 வயதான Meir Cohen என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.

இது 2026 ஆம் ஆண்டில் Toronto பகுதியில் பதிவான 29ஆவது கொலைச் சம்பவமாகும்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை Toronto காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

Previous articleராட்சத டைனோசர்கள், பிரம்மாண்டமான சாசேஜ்கள்: கனடாவின் வீதியோர ஈர்ப்புச் சின்னங்கள் தற்காத்துக் கொள்ளப்படுமா?
Next articleToronto நகரில் வழிப்போக்கரிடம் நகையை மாற்றித் திருடிய நபர் – காவல்துறை தேடுதல்!