ராட்சத டைனோசர்கள், பிரம்மாண்டமான சாசேஜ்கள்: கனடாவின் வீதியோர ஈர்ப்புச் சின்னங்கள் தற்காத்துக் கொள்ளப்படுமா?

CBC

கனடாவின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான வீதியோரக் கலைப் பொருட்கள் மற்றும் சின்னங்கள் (Roadside Attractions) சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களித்து வந்தாலும், அவற்றின் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

1950 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை (Trans-Canada Highway) அமைக்கப்பட்டபோது, சிறு நகரங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து உணவகங்கள் மற்றும் எரிபொருள் விற்பனை மூலம் வருவாயை ஈட்டவே இத்தகைய ராட்சதச் சின்னங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது சுமார் 1,500 இவ்வாறான சின்னங்களை மிரா வான் போடேகோம் (Mira van Bodegom) என்பவர் தனது இணையதளத்தின் மூலம் நிர்வகித்து வருகின்றார்.

இருப்பினும், பராமரிப்புச் செலவு காரணமாக டங்கனில் (Duncan, B.C.) இருந்த உலகின் மிகப்பெரிய ஹாக்கி மட்டை 2024-இல் அகற்றப்பட்டது.

அதேபோல், டிரம்ஹெல்லரில் (Drumheller, Alta.) உள்ள புகழ்பெற்ற ‘டைரா’ (Tyra the Tyrannosaurus) டைனோசர் சின்னத்தின் குத்தகை ஒப்பந்தம் 2029-இல் முடிவடையவுள்ள நிலையில், அதன் பராமரிப்பிற்கு இலட்சக்க கணக்கில் நிதியமைப்பது சவாலாக மாறியுள்ளதால் அதன் எதிர்காலமும் நிச்சயமற்றதாக உள்ளது.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மாற்றங்களால் இத்தகைய சின்னங்களின் தேவை குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Previous article‘கனடாவின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் நேசிக்கிறேன்’: இளவரசர் ஹரி சிறப்புப் பேட்டி!
Next article2026 ஆம் ஆண்டில் Toronto பகுதியில் 29 கொலைச் சம்பவம் பதிவு- கொலையாளி கைது!