கனடாவின் Scarborough மற்றும் Etobicoke ஆகிய பகுதிகளில் எரிந்த நிலையிலிருந்த வாகனங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்களிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.
முதல் சம்பவம் ஸ்கார்பரோவின் Reesor Roadஇலும், அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் இரண்டாவது சம்பவம் எட்டோபிகோவின் James Garden Park இலும் இடம்பெற்றுள்ளது.
உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் மூலம், அவர்கள் இருவரும் வாகனங்கள் தீப்பற்றி எரிவதற்கு முன்னரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்கார்பரோ சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதான Marcus Charles என விரல்ரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டாவது நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துப்பறியும் அதிகாரி Henri Marsman தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவங்கள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் என நம்பப்படுவதாகவும், பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
