மாணவர்களின் 2 மணி நேர பேருந்து பயணம்: அஜாக்ஸ் பெற்றோர்கள் கவலை!

citynews

கனடாவின் அஜாக்ஸ் (Ajax) பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளதால், பெற்றோர்கள் தீவிர கவலையும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

தெற்கு அஜாக்ஸிலிருந்து பிக்கரிங் உயர்நிலைப் பாடசாலைக்கு (Pickering High School) சிறப்புப் கல்வித் திட்டத்திற்காகச் செல்லும் சுமார் 40 முதல் 50 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 7 மணிக்கு முன்பே பேருந்தில் ஏற வேண்டியிருப்பதால் மாணவர்கள் போதிய தூக்கமின்றி களைப்படைவதாகவும், அவர்களின் மனநலன் மற்றும் இதர நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுவதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தச் சேவை 40 முதல் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கல்வியாண்டில் மீண்டும் மாற்றப்பட்டுள்ளமைக்கு போக்குவரத்து அமைப்பிடமிருந்து தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இந்த வழித்தட மாற்றம் குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொண்ட லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரொப் செர்ஜானெக் (Rob Cerjanec), மாகாண அரசாங்கத்தின் போதிய நிதியுதவி இன்மையே இத்தகைய சிரமங்களுக்கு முதன்மை காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் இது குறித்து கல்வி அமைச்சைத் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Previous articleTorontoவில் பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டல்: 50 குற்றச்சாட்டுகளுடன் நபரொருவரைத் தேடும் பொலிஸார்
Next articleஎரிந்த வாகனங்களில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் : துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக Toronto பொலிஸார் உறுதி!