Torontoவில் பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டல்: 50 குற்றச்சாட்டுகளுடன் நபரொருவரைத் தேடும் பொலிஸார்

கனடாவின் (Toronto) மேற்குப் பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் நடாத்தி, பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து, அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நபரைத் தேடி Toronto பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், செயிண்ட் கிளேயர் அவென்யூ வெஸ்ட் (St. Clair Avenue West) மற்றும் லான்ஸ்டவுன் அவென்யூ (Lansdowne Avenue) பகுதிக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தையும் மிரட்டி, தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தொராண்டோவைச் சேர்ந்த 41 வயதான Paul Durante என்பவர் தேடப்பட்டு வருகிறார்.

இவர் மீது தாக்குதல், பாலியல் அத்துமீறல், பயமுறுத்துதல், நன்னடத்தை விதியை மீறியமை மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியமை உட்பட 50 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles