Mississauga-வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தைத் தொடர்ந்து 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
Iverhouse Drive மற்றும் Lakeshore Road West பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றின் நடைபாதையில், திங்கள் அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதுடன், சில குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாகக் கருதப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆய்வு முடியும் வரை சம்பவ இடம் பாதுகாப்பில் வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










