பல ஆண்டுகளாக லொட்டரியில் ஒரே எண்ணை தெரிவு செய்த ஒருவருக்கு கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா? 25 மில்லியன் டொலர்கள்!
Ontario, Innisfil பகுதியைச் சேர்ந்த Stanley J. என்பவர், LOTTO MAX லாட்டரியில் $25 million jackpot வென்று ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளாக plumber ஆக பணியாற்றிய Stanley, சில ஆண்டுகளுக்கு முன்பு Quick Pick மூலம் கிடைத்த ஒரு தொகுப்பு எண்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
“அந்த எண்களை மாற்றாமல் வைத்திருந்தது நல்ல முடிவாகிவிட்டது” என்கிறார் அவர்.
ஜூலை 24ஆம் திகதி Woodstock சென்றிருந்தபோது, Food Basics கடையில் இந்த winning ticket-ஐ வாங்கியுள்ளார். அன்று இரவு $25 million வென்றார்.
பின்னர் $25 million தனது bank account-ல் இருப்பதை பார்த்தபோதுதான் Stanley-க்கு அது உண்மையாகத் தோன்றியுள்ளது. இப்போது lake-side house, classic hot rod, பயணங்கள் என தனது புதிய வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்.
பல ஆண்டுகளாக மாற்றாமல் வைத்திருந்த சில எண்கள்… இப்போது Stanley-யின் வாழ்க்கையையே மாற்றிவிட்டன!
