GTA பகுதியில் பெட்ரோல் நிரப்ப வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கலாம்!

பெட்ரோல் விலை புதன்கிழமை இரவு லிட்டருக்கு 6 சென்ட் அதிகரித்து 190.9 சென்ட் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நல்ல செய்தி என்னவென்றால் — வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 12 சென்ட் வரை குறையலாம் என எரிபொருள் விலை ஆய்வாளர் Dan McTeague தெரிவித்துள்ளார்.

இதனால், உடனடியாக பெட்ரோல் தேவைப்படவில்லை என்றால், வெள்ளிக்கிழமை வரை காத்திருப்பது நல்லது என அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த காலப்பகுதியில், எரிபொருள் நிலையங்கள் கோடைக்கால gasoline blend-இலிருந்து குளிர்கால blend-க்கு மாறுவது வழக்கம். இதுவும் விலை குறைவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சந்தையில் gasoline தொடர்பான லாபம் எடுக்கும் நடவடிக்கைகளும் விலையை கீழே கொண்டு வரக்கூடும்.

ஆனால் diesel பயன்படுத்துபவர்களுக்கு நிலை மாறுபட்டுள்ளது.

Diesel விலை லிட்டருக்கு 14 சென்ட் அதிகரித்து 268.9 சென்ட் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trucks, trains, aircraft மற்றும் ships உள்ளிட்ட பல போக்குவரத்து துறைகள் diesel-ஐ நம்பியிருப்பதால், diesel விலை அதிகரிப்பு உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என McTeague எச்சரித்துள்ளார்.

Related Articles

Latest Articles