YouTube-ல் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்? – Calgary நபர் மீது குற்றச்சாட்டு

கனடா பிரதமர் Mark Carney-க்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, Calgary-யைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

RCMP தகவலின்படி, கடந்த July 28 அன்று பிரமர் Mark Carney-யை கொலை செய்வதாக மிரட்டும் தகவல் YouTube வீடியோ பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட RCMP, குறித்த வீடியோவை வெளியிட்ட Jamie Dacosta என்பவரை கைது செய்து மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பதிவு செய்தது. Dacosta தற்போது காவலில் உள்ளார். வழக்கு September 18 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Dacosta மீது இதற்கு தொடர்பில்லாத வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றில் மிரட்டிப் பணம் பறித்தல், குற்றவியல் ரீதியான துன்புறுத்தல், மரண அச்சுறுத்தல், சொத்து சேதம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடங்குகின்றன.

பொது பிரமுகர்களுக்கு எதிரான பாதுகாப்பு சூழல் மாறிவருவதால் அதிக விழிப்புணர்வு தேவைப்படுவதாக RCMP தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles