Toronto-வில் சிறுமிகளை Social Media மூலம் தொடர்புகொண்டு பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயது இளைஞர் மீது மேலும் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Toronto Police தகவலின்படி, Kaden Charles-Robinson என்பவர் தொடர்பான விசாரணையில் மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2024 ஏப்ரல் மாதம் Instagram மூலம் அந்த சிறுமியுடன் தொடர்பை ஆரம்பித்ததாகவும், பின்னர் பாலியல் தன்மை கொண்ட வீடியோக்களை அனுப்புமாறு அவரை தூண்டியதாகவும் போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பின்னர் Evans Avenue மற்றும் Kipling Avenue அருகிலுள்ள ஒரு பூங்காவில் இருவரும் சந்தித்தபோது, சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர், அந்த சிறுமியை வாகனத்திற்குள் ஏற்ற முயற்சித்தபோது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஆனால் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து September 1 அன்று Charles-Robinson கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் Snapchat மூலம் மற்றொரு சிறுமியை தொடர்புகொண்டு, சந்திப்புக்கு அழைத்து பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வேறொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருடன் தொடர்புடைய தகவல்கள் இருப்பவர்கள் டொரண்டோ பொலிசை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
