Pearson உட்பட கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – Carneyயின் புதிய திட்டம்!

கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான Toronto Pearson தொடர்பாக மத்திய அரசு முக்கியமான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

Toronto Pearson மட்டுமல்லாமல், Montreal–Trudeau, Calgary, Vancouver ஆகிய கனடாவின் நான்கு பெரிய விமான நிலையங்களின் செயல்பாடுகளில் தனியார் முதலீட்டை கொண்டு வர பிரதமர் Mark Carney தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்த விமான நிலையங்களின் நிலங்களையோ முக்கிய சொத்துகளையோ தனியாருக்கு விற்பனை செய்யப் போவதில்லை என்று பிரதமர் Carney தெரிவித்துள்ளார். அவற்றின் உரிமை மத்திய அரசிடமே தொடரும்.

அதற்குப் பதிலாக, நீண்டகால சலுகை ஒப்பந்தங்கள் மூலம் தனியார் முதலீடு, மூலதனம் மற்றும் நிர்வாக நிபுணத்துவத்தை விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்குள் கொண்டு வருவது அரசின் திட்டமாகும்.

இதற்கு Toronto Pearson-ஐ நிர்வகிக்கும் Greater Toronto Airports Authority பதிலளித்துள்ளது.

மத்திய அரசின் எதிர்கால விமான நிலைய முதலீட்டுத் திட்டத்தை தாங்கள் கவனத்தில் எடுத்துள்ளதாகவும், Pearson விமான நிலையத்தின் நீண்டகால பொருளாதார மதிப்பு மற்றும் பயணிகளின் தேவைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரசுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் Pearson தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Canadian Labour Congress, தனியார் முதலீடு பயணிகளுக்கான செலவுகள் அதிகரிப்பதற்கும், தொழிலாளர்கள் மீது அழுத்தம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இது தவறான முடிவு என்றும் விமர்சித்துள்ளது.

Related Articles

Latest Articles