15 வயதிலேயே தொடர் கொள்ளை? 15, 16 வயது சிறுவர் உட்பட நால்வர் கைது!

கனடாவின் GTA பகுதியில் வாகனத் திருட்டு மற்றும் வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்த தொடர் சம்பவங்கள் தொடர்பாக, 15, 16 வயது சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Durham Regional Police தகவலின்படி, இந்தக் குழு Durham Region மற்றும் Toronto பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மொத்தம் 36 சம்பவங்களுடன் இந்த சந்தேகநபர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் ஒரு மில்லியன் டொலரை அண்மித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அடகு கடை, கஞ்சா மருந்தகம், நகைக் கடை உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் இலக்காகியுள்ளன.

இந்த விசாரணையில் இதுவரை 200-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Durham Police தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் Pickering-ஐச் சேர்ந்த 18 வயதான Mahith Sivananthan மற்றும் Toronto-வைச் சேர்ந்த 18 வயதான Mohammad Sakrak ஆகியோரும் அடங்குகின்றனர்.

மேலும் 15, 16 வயதுடைய இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வளவு இளம் வயதினர் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது கவலைக்குரியது என பொலிஸார் தெரிவித்ததுடன், இளைஞர்கள் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles