ஸ்காபறோவில் நடந்த கோடைக் காலத்தின் நிறைவு வெளி விழா Mega Blast!

கனடாவின் இவ்வாண்டின் கோடைக் காலத்தின் நிறைவாக வெளியே நடத்தப்பட்ட Mega Blast நிகழ்ச்சி கடந்த சனி, ஞாயிறு தினங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வர்த்தகச் சாவடிகள், சமூக அமைப்புக்களின் சாவடிகள் என 50இற்கும் மேற்பட்ட சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களான TAMIL ONE TV மற்றும் S.V MEDIA ஆகிய நிறுவனங்கள் இந்த நிகழ்வை நடத்தியிருந்தனத.

மூன்று மேடைகள் அமைக்கப்பட்டு சுமார் ஒரு கிலோமீட்டர் வீதி இடைமறிக்கப்பட்டு பிரமாண்டமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. பல்லின கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் முதல் நாள் நிகழ்வு ஆரம்பமானது. அதன்பின்னர் உள்ளுர் பல்லின சமூகத்தின் கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க, மாலை 6.30இற்கு இசை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

தமிழகத்திலிருந்து ச.ரி.க.ம.ப இசைப் போட்டியில் வெற்றியாளர்களான திப்பு சுசந்திகா, பவித்திரா, சிறிஹரி உட்பட பல பாடக பாடகிகள் இசை நிகழ்ச்சியை அலங்கரித்தனர். சுமார் 10 மணி நேர பெருவிழாவான இந்த ‘MEGA BLAST’ தமிழ் வண் அறிவிப்பாளர்களும், பிரதானிகளுமான பிரசாந்த் மற்றும் தனராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தனர்.

சனிக்கிழமை இரவு பெருந்திரளமான மக்கள் ஒன்றுகூடியிருந்த நிகழ்ச்சி இரவு 11 மணி வரை தொடர்ந்ததுடன் ஞாயிற்றுக்கிழமை இன்னும் அதிகமான மக்களின் வருகையுடன் இசை நிகழ்ச்சியும் களைகட்டியதுடன் கோடைக்கால வெளிகள நிறைவு நிகழ்வாக ‘MEGA BLAST’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Related Articles

Latest Articles