இத்தாலியின் Alps மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போயுள்ள கனடிய skyrunner Kalie McCrystal-ஐ தேடும் நடவடிக்கையை இத்தாலிய அதிகாரிகள் தற்போது இடைநிறுத்தியுள்ளனர்.
38 வயதான Kalie McCrystal, செப்டம்பர் 1ஆம் தேதி Matterhorn மலையின் இத்தாலியப் பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.
Matterhorn மலை சுமார் 4,478 மீட்டர் உயரம் கொண்டது. மலையை ஏறி மீண்டும் கீழிறங்கும் சாதனையை ஐந்து மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் McCrystal பயிற்சி மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை கண்டுபிடிப்பதற்காக பல நாட்களாக helicopter மூலம் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் எந்த தடயமும் கிடைக்காத நிலையில், தற்போது helicopter search இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, McCrystal வைத்திருந்ததாக கருதப்படும் தொலைபேசி மற்றும் பிற electronic devices-இலிருந்து ஏதேனும் signal கிடைக்கிறதா என்பதையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சில தேடுதல் முயற்சிகளில் drones பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாத நிலையில், Kalie McCrystal பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது குடும்பத்தினரிடமும் மலையேற்ற சமூகத்தினரிடமும் தொடர்ந்து நிலவுகிறது.
