கனடாவில் இம்முறை குளிர் குறையுமா? – வலிமையடையும் El Niño!

கனடாவில் இந்த முறை குளிர்காலம் வழக்கத்தை விட மிகவும் மிதமாக இருக்குமா?

உலகளவில் கவனம் பெற்றுள்ள El Niño, இதுவரை பதிவானவற்றில் மிகவும் வலுவான ஒன்றாக மாறக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, தற்போதைய El Niño குறைந்தபட்சம் பிப்ரவரி மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 100 சதவீதம்.

இந்த El Niño தொடர்ந்து வலுப்பெற்றால், கடந்த பல தசாப்தங்களில் பதிவான மிக வலுவான El Niño நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறக்கூடும் என 

Environment and Climate Change Canada-வின் மூத்த காலநிலை நிபுணர் David Phillips கூறியுள்ளார். 

இதன் தாக்கம் கனடாவின் குளிர்காலத்திலும் தெளிவாகத் தெரியலாம்.

வழக்கமான Arctic குளிர்காற்றின் தாக்கம் குறைந்து, Pacific பகுதியிலிருந்து வரும் மிதமான காற்று அதிகம் ஆதிக்கம் செலுத்தலாம். இதனால் பல பகுதிகளில் குறைந்த பனிப்பொழிவு, அதிக மழை மற்றும் வழக்கத்தை விட வெப்பமான குளிர்காலம் காணப்படலாம்.

இதனால் வீட்டின் heating செலவு குறைய வாய்ப்பு இருந்தாலும், skiing போன்ற குளிர்கால விளையாட்டுகளுக்கு இது பாதகமாக அமையும். 

மேற்கு கனடாவில் குறைந்த பனிப்பொழிவு காரணமாக, அடுத்த வசந்த காலத்தில் வறட்சி மற்றும் காட்டுத்தீ அபாயமும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

விவசாயத்திற்குத் தேவையான நீர்வளம் குறைவதற்கான அபாயமும் உள்ளது.

அதேநேரம் Atlantic Canada-வில் El Niño காரணமாக சூறாவளிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles