கனடாவில் Free Park Entry முடிவுக்கு வருகிறது

கனடா முழுவதும் தேசிய பூங்காக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் சில அருங்காட்சியகங்களை குறைந்த செலவில் அல்லது இலவசமாக பார்வையிட உதவிய Canada Strong Pass திட்டம் முடிவுக்கு வருகிறது.

2025ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மத்திய அரசின் திட்டம், இந்த கோடைக்காலத்திலும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் கனடாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வரலாற்று தளங்களுக்கு இலவச அல்லது சலுகை கட்டணத்தில் அனுமதி கிடைத்ததுடன், சில அருங்காட்சியகங்கள் மற்றும் ரயில் பயணங்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டன.

ஜூன் மாதம் தொடங்கிய இந்த தற்காலிக திட்டம் தற்போது முடிவுக்கு வருவதால், மீண்டும் வழக்கமான நுழைவுக் கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.

இந்த திட்டம் குடும்பங்களுக்கு குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் குடும்பங்களுக்கு இது குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்கியதாக கூறப்படுகிறது. 

2025ஆம் ஆண்டு Canada Strong Pass நடைமுறையில் இருந்தபோது, Parks Canada இடங்களுக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் அதிகரித்து, 14 மில்லியனைத் தாண்டியது.

மேலும், முதல் முறையாக தேசிய வரலாற்று தளங்களை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக Parks Canada அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த திட்டத்தை கோடைக்காலத்திற்கு மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆனால் Canada Strong Pass 2027ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

Related Articles

Latest Articles