Toronto-வை தாக்கிய புயல் எப்படி உருவானது?

September 2ஆம் திகதி புதன்கிழமை Toronto-வில் கனமழை, ஆலங்கட்டி மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட புயல், நகரின் பல பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. Don Valley Parkway உள்ளிட்ட முக்கிய வீதிகள் பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரத்தையும் இழந்தன. 

ஆனால் இந்தப் புயல் இவ்வளவு தீவிரமடைய என்ன காரணம்?

வானிலை நிபுணர்களின் விளக்கப்படி, Toronto மீது ஏற்கனவே மிகவும் சூடான மற்றும் ஈரப்பதம் நிறைந்த tropical air mass இருந்தது. இதுவே புயலுக்கான எரிபொருளாக அமைந்தது.

அதே நேரத்தில் வடக்கிலிருந்து வந்த குளிர்காற்று அந்த சூடான ஈரமான காற்றை மிக வேகமாக மேலே தள்ளியது.

மேலே சென்ற காற்று குளிர்ந்து, மிகப் பெரிய இடியுடன் கூடிய மழை மேகமாக உருவாகின. அதற்குள் தண்ணீரும் பனிக்கட்டிகளும் பெருமளவில் சேர்ந்து, பின்னர் ஒரே நேரத்தில் கனமழை மற்றும் பெரிய ஆலங்கட்டியாக கீழே விழுந்தன.

இந்த கீழ்நோக்கிய காற்றோட்டம் தரையை அடைந்தபோது மிகவும் பலமான காற்றையும் உருவாக்கியது.

Related Articles

Latest Articles