Toronto மற்றும் GTA பகுதிகளில் Gas விலை இந்த வார இறுதியில் மேலும் அதிகரிக்கும் என எரிபொருள் விலை ஆய்வாளர் Dan McTeague தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை Regular Gas விலை ஒரு லிட்டருக்கு 182.9 cents ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை அது சுமார் 183.9 cents ஆக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டர் Gas விலை சுமார் 1 dollar 87 cents வரை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மே மாத நடுப்பகுதியிலிருந்து GTA-வில் காணப்படாத அளவிலான உயர்ந்த விலையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விலை அடுத்த வியாழக்கிழமை வரை பெரிய மாற்றமின்றி தொடர வாய்ப்புள்ளதாகவும் Dan McTeague தெரிவித்துள்ளார்.
எனினும், Summer blend gasoline-இலிருந்து Winter blend gasoline-க்கு விநியோகம் மாறும்போது, Gas விலை லிட்டருக்கு சுமார் 7 cents வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை Diesel விலையும் தற்போது மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. உலகளாவிய அளவில் Diesel விநியோகம் குறைவாக இருப்பதும், மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள மோதல்களும் இதற்கான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
