Scarborough-வில் Liberal MP ஒருவரின் வீட்டுக்கு வெளியே வாகனங்கள் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Scarborough Centre–Don Valley East தொகுதியின் Liberal MP Salma Zahid-ன் வீட்டில் கடந்த August 27ஆம் திகதி அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
வீட்டின் driveway-யில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சந்தேக நபர் ஒருவர் எரிபொருள் போன்ற தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்ததில் இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், மூன்றாவது வாகனம் சேதமடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டிருந்த போலீசார், August 30ஆம் திகதி 24 வயதான Roshvin Crofton என்பவரை கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இரண்டாவது சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது MP Salma Zahid-ஐ குறிப்பாக இலக்கு வைத்த சம்பவமா என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
