சிறுமிகளுக்குப் பலமுறை பாலியல் தொல்லை – 63 வயது நபர் கைது!

கனடாவின் Pickering பகுதியைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர், இரண்டு சிறுமிகளுக்குப் பலமுறை பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக சுமார் 22 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அறிமுகமான இந்நபர், Toronto மற்றும் Pickering ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் சென்று, 2025 நவம்பர் முதல் 2026 ஜூலை வரை பல சந்தர்ப்பங்களில் சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இதனையடுத்து, Faruk Dewan என்ற 63 வயது நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, அவர் மீது 11 பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டோரை பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்திய 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Pickering பகுதியில் தனது வீட்டில் ஓவியப் பயிற்சி அளித்து வந்த இவரால், மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என Durham Regional Police சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Latest Articles