கனடாவில் நடைபெற்ற மூன்று முக்கிய Federal By-Elections-களிலும் பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal Party முழுமையான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Ontario-வின் Beaches–East York, British Columbia-வின் North Vancouver–Capilano ஆகிய Liberal தொகுதிகளை கட்சி தக்கவைத்ததுடன், Quebec-ன் Chicoutimi–Le Fjord தொகுதியை Conservatives-இடமிருந்து கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய வெற்றி Quebec-ல் பதிவாகியுள்ளது. Liberal வேட்பாளர் Daniel Gobeil 51.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். Bloc Québécois வேட்பாளர் 32.9 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், Conservative வேட்பாளர் சுமார் 13 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
Toronto-வின் Beaches–East York தொகுதியில் Liberal வேட்பாளர் Tanveer Shahnawaz சுமார் 55 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
North Vancouver–Capilano தொகுதியில் Liberal வேட்பாளர் Braeden Caley சுமார் 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இந்த மூன்று வெற்றிகளோடு தற்போது 173 இடங்களுடன் Carney அரசு House of Commons-ல் தனது பெரும்பான்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக Canada–U.S. வர்த்தக பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் கிடைத்துள்ள இந்த வெற்றி, Carney அரசுக்கு முக்கிய அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், Pierre Poilievre தலைமையிலான Conservatives-க்கு, குறிப்பாக Quebec-ல் ஏற்பட்டுள்ள பின்னடைவு, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் strategy குறித்த புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.










