$35,000 திருட்டுப் பொருட்கள் மீட்பு! Golden Horseshoe-ஐ கலக்கிய சந்தேகநபர் கைது

ஒன்ராறியோவின் Golden Horseshoe பகுதிகளில் இடம்பெற்ற குறைந்தது 38 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 49 வயதான நபர் ஒருவரை Peel Regional Police கைது செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் என விவரிக்கப்பட்ட இந்த சந்தேகநபரை இலக்கு வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், Peel, Halton, Durham, Niagara பிராந்தியங்களிலும், Hamilton நகரிலும் இடம்பெற்ற குறைந்தது 38 திருட்டு தொடர்பான சம்பவங்களுடன் இந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், Mississauga-வைச் சேர்ந்த 49 வயதான Anthony Orlando Monteith, ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக Peel Regional Police தெரிவித்துள்ளனர். அவர் மீது 14 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதுக்குப் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில், 35,000 டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டு பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles