இந்த Power Bank உங்களிடம் இருக்கிறதா? உடனே பயன்படுத்துவதை நிறுத்துங்கள்!

Winners, HomeSense மற்றும் Marshalls கடைகளில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 30,000 Power Banks உடனடியாக recall செய்யப்பட்டுள்ளன.

Health Canada வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, XO Poppy 5000 mAh MagSafe Power Bank மாடல்களில் சிலவற்றின் lithium-ion battery சார்ஜ் செய்யும்போது அதிகமாக சூடாகி, charging port பகுதியில் உருகக்கூடிய அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தீப்பற்றுதல் மற்றும் தீக்காயங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக Health Canada எச்சரித்துள்ளது.

இந்த தயாரிப்புகள் கனடாவில் 2024 மே முதல் 2026 மார்ச் மாதம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சுமார் 30,000 units கனடாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த Power Bank உங்களிடம் இருந்தால், உடனடியாக பயன்படுத்துவதையும் charge செய்வதையும் நிறுத்துமாறு Health Canada கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட Power Bank-ஐ வாங்கிய கடையில் கொடுத்து refund பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Latest Articles