York Region பகுதியில் தட்டம்மை — Measles தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய வெளிப்பாடு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
York Region Public Health தெரிவித்துள்ள தகவலின்படி, தொற்றுக்குள்ளான ஒருவர் Vaughan நகரில் உள்ள Cortellucci Vaughan Hospital Emergency Department-க்கு இரண்டு வெவ்வேறு நாட்களில் சென்றுள்ளார்.
August 17, திங்கட்கிழமை, Emergency Waiting Room மற்றும் Ambulatory Care மாலை முதல் இரவு வரை இருந்தவர்கள் தட்டம்மைத் தொற்றுக்கு ஆளாகியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று August 21, வெள்ளிக்கிழமை, Emergency Waiting Room மற்றும் Ambulatory Care பகுதியில் காலை முதல் மதியம் வரை இருந்தவர்களும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவத்தல் அல்லது நீர் வடிதல், பின்னர் முகம் மற்றும் கழுத்திலிருந்து உடலின் கீழ்ப்பகுதிக்கு பரவும் சிவப்பு நிற rash ஆகியவை தட்டம்மையின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். பொதுவாக தொற்று ஏற்பட்ட 7 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றக்கூடும்.
குறிப்பாக August 21 அன்று மருத்துவமனையில் இருந்தவர்கள் தங்களுக்கு இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு Public Health கேட்டுக்கொண்டுள்ளது.
தட்டம்மை மிகவும் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று. தொற்றுள்ள ஒருவர் அந்த இடத்தைவிட்டு சென்ற பின்னரும் சுமார் இரண்டு மணி நேரம் வரை வைரஸ் காற்றிலோ மேற்பரப்புகளிலோ இருக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










