அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “Lake America” அறிவிப்புக்கு, டொராண்டோவில் இருந்து சுவாரஸ்யமான பதிலடி ஒன்று வந்திருக்கிறது!
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், Lake Ontario-வின் பெயரை “Lake America” என மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் தனது Truth Social பதிவில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள டொராண்டோ மேயர் தேர்தல் வேட்பாளரும், தற்போதைய City Councillor-மான Brad Bradford, ட்ரம்ப் Lake Ontario-வை “Lake America” என அழைக்கப் போகிறார் என்றால், அமெரிக்காவின் New York State-ஐ இனிமேல் “Province of New York” — அதாவது “நியூயோர்க் மாகாணம்” என்று அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Lake Ontario என்பது முழுமையாக அமெரிக்காவுக்குச் சொந்தமான ஏரி அல்ல. கனடாவின் Ontario மாகாணத்திற்கும் அமெரிக்காவின் New York மாநிலத்திற்கும் இடையே அமைந்துள்ள இந்த ஏரி, இரு நாடுகளாலும் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.
ட்ரம்ப் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக பெயரை மாற்ற முடிந்தாலும், கனடாவோ அல்லது சர்வதேச அமைப்புகளோ அந்தப் பெயரை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
Canada–U.S. வர்த்தக மோதல் தற்போது பெயர் மாற்றப் போராட்டமாகவும் மாறியிருக்கிறது!










