கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், Ontario Premier Doug Ford அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Hamilton நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த Ontario Premier Doug Ford, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கனடா வலுவான பதிலை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Canada–U.S. பேச்சுவார்த்தையிலிருந்து பிரதமர் Mark Carney விலகிய முடிவுக்கும் Ford ஆதரவு தெரிவித்துள்ளார். குறிப்பாக Ontario-வின் auto, steel மற்றும் manufacturing துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒப்பந்தத்தையும் ஏற்கக்கூடாது என்பது அவரது நிலைப்பாடாக உள்ளது.
அமெரிக்காவுடனான மோதல் தொடர்ந்தால் மின்சார ஏற்றுமதி மற்றும் critical minerals உள்ளிட்ட வளங்களைக் கூட பயன்படுத்தி பதிலடி கொடுப்பது பரிசீலனையில் இருக்கலாம் என்று Ford தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், Donald Trump கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் கார்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் steel மீது 2027 ஜனவரி முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளார். இது Ontario-வின் வாகன உற்பத்தித் துறைக்கு மிகப்பெரிய சவாலாக அமையக்கூடும்.
இந்த வர்த்தக மோதலால் பாதிக்கப்படும் Ontario நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில், மாகாணத்தின் Protect Ontario Financing Program-க்கான தகுதி விரிவுபடுத்தப்படுவதாக Ontario அரசு அறிவித்துள்ளது. புதிய அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்தவும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் உதவுவதே இதன் நோக்கம்.










