Brantford-ல் பிறந்து 1-2 நாட்களேயான நிலையில் பெட்டிக்குள் கைவிடப்பட்ட 11 நாய்க்குட்டிகள்!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிறந்து ஒன்று முதல் இரண்டு நாட்களே ஆன 11 குட்டிநாய்கள் அட்டைப் பெட்டிக்குள் வைத்து கைவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Brantford நகரின் Echo Place பகுதிக்கு அருகிலுள்ள Beach Road trail பகுதியில், திங்கட்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் இந்தக் குட்டிநாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Brantford நகரத்துடன் இணைந்து விலங்கு நலப் பிரச்சினைகளை கையாளும் Hillside Kennels Animal Control நாய்க்குட்டிகளை அங்கிருந்து மீட்டுள்ளது.

பிறந்து சில மணி நேரங்களே ஆன இந்தச் சிறிய உயிர்களை ஒரு பெட்டிக்குள் வைத்து கைவிட்டுச் சென்றது நியாயமற்ற செயல் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குட்டிகளின் தாய் நாய் குட்டிகளைத் தேடித் தவித்துக்கொண்டிருக்கக்கூடும் அல்லது உயிரிழந்திருக்கக்கூடும் என்பதும் தங்களுக்கு கவலையளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட 11 குட்டிநாய்களும் bully breed வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிறந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களே ஆனதால், இவற்றுக்கு தொடர்ச்சியான விசேட பராமரிப்பு தேவைப்படுகிறது.

இதனால் குட்டிநாய்கள் வேறொரு அமைப்பின் பராமரிப்புக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்தக் குட்டிநாய்களை யார் கைவிட்டார்கள் அல்லது அவை எவ்வாறு அங்கு வந்தன என்பது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், Ontario மாகாண விலங்கு நல சேவையை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles