கனடா PR வாய்ப்பு: British Columbia 602 பேருக்கு அழைப்பு – 2026 இன் BC PNP Draw!

கனடாவில் நிரந்தர வதிவிடத்தை நோக்கி பயணிக்கும் skilled workers-க்கு British Columbia மாகாணத்திலிருந்து முக்கியமான குடியேற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

British Columbia Provincial Nominee Program – BC PNP, ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்ற புதிய தெரிவுச் சுற்றில் 602 பேருக்கு Provincial Nomination-க்கு விண்ணப்பிக்க அழைப்பு வழங்கியுள்ளது. இது 2026ஆம் ஆண்டில் British Columbia நடத்திய மிகப்பெரிய selection round ஆகும்.

இந்த 602 அழைப்புகளும் மாகாணத்தின் “Innovate – High Economic Impact” பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அதாவது British Columbia-வின் பொருளாதாரத்துக்கு அதிக பங்களிப்பு செய்யக்கூடிய, அதிக வருமானம் பெறும் அல்லது அதிக registration score கொண்ட skilled workers இந்தத் தேர்வில் முன்னுரிமை பெற்றுள்ளனர்.

இதில் முதல் பிரிவின் கீழ் 337 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொரு பிரிவில், BC PNP registration score அடிப்படையில் 265 பேருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய draw, British Columbia-வுக்கு 2026ஆம் ஆண்டுக்காக மேலும் 1,000 provincial nomination இடங்கள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான British Columbia-வின் மொத்த nomination allocation 6,254 ஆக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 20 நிலவரப்படி, British Columbia இந்த ஆண்டில் skilled workers மற்றும் entrepreneurs உட்பட குறைந்தது 4,926 பேருக்கு Provincial Nomination-க்கு விண்ணப்பிக்க அழைப்பு வழங்கியுள்ளது.

அதிக சம்பளத்துடன் skilled job offer வைத்திருப்பவர்களுக்கும், BC PNP-ல் அதிக points பெற்றிருப்பவர்களுக்கும், British Columbia வழியாக கனடா PR பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து திறக்கப்படுகின்றன என்பதையே இந்த புதிய draw காட்டுகிறது.

Related Articles

Latest Articles