கல்லூரி வகுப்பறைகளில் Laptop இல்லாமல் படிப்பதை இன்று கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ஆனால் கனடாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான University of Toronto-வின் Henry N.R. Jackman Faculty of Law, இந்த Fall semester முதல் சில சட்ட வகுப்புகளை “Laptop-Free Classrooms” ஆக மாற்ற தயாராகி வருகிறது. அனைத்து வகுப்புகளுக்கும் இது கட்டாயமில்லை; பேராசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் Laptop பயன்பாட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
Laptop-ல் மிக வேகமாக முழுமையான குறிப்புகளை Type செய்வதால், மாணவர்கள் பாடத்தை ஆழமாக சிந்திப்பதற்கும், வகுப்பறை விவாதங்களில் முழுமையாக ஈடுபடுவதற்கும் தடையாக இருக்கலாம் என்பதே முக்கிய கவலை என Associate Dean Richard Stacey மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
கையால் குறிப்பெடுக்கும்போது, மாணவர்கள் மெதுவாக எழுத வேண்டியிருப்பதால், கேட்கும் தகவலைப் புரிந்துகொண்டு, அதில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் பாடத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும் என ஆய்வுகளை சுட்டிக்காட்டி சட்ட பீடம் கூறுகிறது. வகுப்பறைகளில் மேம்பட்ட AI tools பயன்படுத்தப்படுவது குறித்தும் பேராசிரியர்களிடம் கவலை அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
Students’ Law Society நடத்திய கருத்துக்கணிப்பில் பதிலளித்த 208 மாணவர்களில் 163 பேர், இந்தக் கொள்கை தங்களது சட்டக் கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை ஏற்கவில்லை. மேலும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கற்றல் முறைகள் இருப்பதாகவும், Laptop பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களிடமே இருக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.
எந்தெந்த பாடங்கள் Laptop-Free ஆக இருக்கும் என்பது அடுத்த மாதம் course outlines வெளியிடப்படும் போது மாணவர்களுக்கு தெரியவரும்.










