Victoria-வில் இருந்து Toronto செல்லவிருந்த Porter Airlines விமானம், ஒரு குழந்தை seatbelt அணிய முடியாத நிலை ஏற்பட்டதால் இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை Victoria International Airport-ல் விமானம் terminal-ஐ விட்டு runway நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சிறு குழந்தை ஒன்று தனது இருக்கையில் நின்றுகொண்டிருப்பதை cabin crew கவனித்துள்ளது.
குழந்தையின் பெற்றோரும் விமானப் பணியாளர்களும் seatbelt அணிவிக்க முயன்றபோதும் அது சாத்தியமாகவில்லை. பாதுகாப்பற்ற நிலையில் விமானத்தைப் புறப்படச் செய்ய முடியாது என்பதால், விமானம் மீண்டும் terminal-க்கு திரும்பியது.
குழந்தையும் பெற்றோரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்ட பின்னர், அவர்களது பயணப்பொதிகளை அகற்றுதல் மற்றும் புதிய flight plan உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்க நேரம் எடுத்தது. அதற்குள் Victoria Airport runway இரவு 12:30 மணிக்கு மூடப்பட்டதால், விமானத்தை அன்றிரவு இயக்க முடியாமல் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனைய பயணிகள் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியதாகியது.










