கல்கரியை நோக்கி படையெடுக்கும் ரக்கூன்கள்!

டொரொண்டோவில் குப்பைத்தொட்டிகளைத் திறந்து உணவு தேடும் ரக்கூன்கள் மிகவும் பொதுவானவை. ஆனால் தற்போது கல்கரி நகரிலும் இந்த விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கல்கரியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 37 ரக்கூன் அவதானிப்புகளில், பாதிக்கும் மேற்பட்டவை 2023 முதல் 2025 வரையான காலத்திலேயே பதிவாகியுள்ளன. 

ரக்கூன்கள் கல்கரியில் சுமார் இருபது ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கலாம் என்றும், தற்போது அவை நகரின் புதிய பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் வனவிலங்கு உயிரியல் நிபுணர் Sara Jordan-McLachlan தெரிவித்துள்ளார்.

ஆனால் டொரொண்டோவைப்போல் கல்கரியில் அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவில்லை. Coyotes மற்றும் bobcats போன்ற விலங்குகளுடன் உணவு மற்றும் வாழ்விடத்திற்கான போட்டியை ரக்கூன்கள் இங்கு எதிர்கொள்கின்றன.

குப்பைகள், செல்லப்பிராணிகளின் உணவு மற்றும் பழமரங்கள் ரக்கூன்களை வீடுகளுக்கு அருகே ஈர்க்கலாம். எனவே உணவுக் கழிவுகளைப் பாதுகாப்பாக மூடி வைக்கவும், வனவிலங்குகளுக்கு உணவளிக்காமல் தூரத்தில் இருந்து அவதானிக்கவும் கல்கரி நகரம் அறிவுறுத்துகிறது.

Related Articles

Latest Articles