Scarborough பகுதியில் இந்த வார இறுதியின் முதல் இரண்டு நாட்களும் புழுக்கமான வானிலையுடன் இடிமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 28 செல்சியஸ் வரை செல்லும்.
பிற்பகலில் 60 சதவீத இடிமழை வாய்ப்பு உள்ளதுடன், Humidex காரணமாக வெப்பம் 34 செல்சியஸ் வரை உணரப்படலாம் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெப்பநிலை 29 செல்சியஸ் வரை செல்லும் என்றும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் மீண்டும் 60 சதவீத இடிமழை வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், ஞாயிற்றுக்கிழமை மழைக்கான வாய்ப்பு குறைந்து, பெரும்பாலும் வெயிலுடன் அதிகபட்சமாக 28 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.
எனவே வார இறுதியில் வெளியே செல்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறந்த நாளாக அமையும் என்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வெளியே செல்பவர்கள் வானிலை அறிக்கைகளை தொடர்ச்சியாக சரிபார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
