Toronto நகரின் மிகவும் பிரபலமான தெருவிழாக்களில் ஒன்றான Taste of the Danforth, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வார இறுதியில் மீண்டும் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 7 முதல் 9ஆம் திகதி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு சுமார் 15 லட்சம் மக்கள் வருகை தருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். Greek உணவு, இசை, நடனம், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம்.
விழாவை முன்னிட்டு Danforth Avenue, Broadview Avenue முதல் Jones Avenue வரை வாகனப் போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்படுகிறது. இந்தச் வீதி மூடல் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து, திங்கட்கிழமை அதிகாலை 3 மணி வரை நீடிக்கும்.
பெருமளவான மக்கள் கூடுவார்கள் என்பதால், விழா முழுவதும் கூடுதல் Toronto Police அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில TTC சேவைகள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படவுள்ளதால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழா வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையும், சனிக்கிழமை நண்பகல் முதல் நள்ளிரவு வரையும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறுகிறது.
