மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!

2006 ஆம் ஆண்டு Zion National Park பகுதியில் மனைவி Bernadette Vander Meer உயிரிழந்த சம்பவத்தில், 20 ஆண்டுகள் கழித்து கொலை மற்றும் காப்புறுதி மோசடி வழக்கில் கைதான முன்னாள் இளம் போதகர் David Vander Meer (49), சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது சிறை அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், தான் மனைவியைக் கொல்லவில்லை என்றும், தாம் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் விபத்து எனக் கருதப்பட்ட இச்சம்பவம், காப்புறுதிப் பணக் கோரிக்கை, சிறுமிகளுடனான பொருத்தமற்ற உறவு மற்றும் வாக்குமூல முரண்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மீண்டும் விசாரிக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Las Vegas பொலிஸாரால் ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட David Vander Meer, Clark County Detention Center சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிஸாரால் வெளியிடப்பட்ட அக்கடிதத்தில், “நான் சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சவில்லை, ஏனெனில் நான் அவளைக் கொல்லவில்லை” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனது கடந்தகால தவறுகளுக்கு குடும்பத்தினர் பொறுப்பல்ல என்றும் எழுதியுள்ளார்.

Related Articles

Latest Articles