பெற்றிக் சந்தோஷ் கொலை வழக்கு: றொரண்டோ பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

2006 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான Patrick Santos இன் வழக்கு தொடர்பில், Toronto காவல்துறை வியாழக்கிழமை காலை முக்கிய செய்தி மாநாடு ஒன்றை நடாத்தி புதிய தகவல்களை வெளியிடவுள்ளது.

கடந்த 2006 செப்டம்பர் 17 அன்று Scarborough பகுதியிலுள்ள அவரது தந்தையின் வீட்டின் பின்புறத்தில், கைகால்கள் கட்டப்பட்ட நிலையிலும், தலை பகுதியில் டேப் சுற்றப்பட்ட நிலையிலும் Patrick Santos சடலமாக மீட்கப்பட்டார்.

மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து கொலையாளியினுடையதாகக் கருதப்படும் DNA மாதிரிகள் கைப்பற்றப்பட்ட போதிலும், தேசிய தரவுத்தளத்தில் (National Databank) அதற்குரிய பொருத்தமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு முதல் மரபியல் வம்சாவளி தரவுத்தளங்களைப் (Genetic Genealogy Databases) பயன்படுத்தி கொலையாளியின் உறவினர்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதிக்காகக் காத்திருக்கும் தாயாரின் கோரிக்கைக்கு மத்தியில், Cold Case பிரிவின் Detective Sergeant Stephen Smith தலைமையிலான குழுவினர் Toronto Police Headquarters இல் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

Related Articles

Latest Articles