கனடாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான WestJet-இன் 4,400 விமான பணிப்பெண்கள் மற்றும் பணிப்பாளர்கள், 72 மணிநேர வேலைநிறுத்த (Strike Notice) அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, WestJet நிர்வாகமும் 72 மணிநேர லொக்-அவுட் (Lockout Notice) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைநிறுத்தம் தவிர்க்க இன்னும் நேரம் உள்ளதாகவும், நியாயமான ஒப்பந்தத்தை எட்ட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் Canadian Union of Public Employees (CUPE) அமைப்பின் Alia Hussain தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக WestJet தலைமை நிர்வாகி Alexis von Hoensbroech கூறியுள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.
இதனால் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை பயணச் சீட்டு முன்பதிவு செய்தவர்கள் கட்டணமின்றி பயணத் திகதியை மாற்றிக்கொள்ள அல்லது ரத்து செய்ய WestJet அனுமதி அளித்துள்ளது.
எனினும், WestJet Encore சேவை மற்றும் Delta Air Lines போன்ற கூட்டாண்மை நிறுவனங்களின் விமான சேவைகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
