கனடாவின் தேசிய சுற்றுலா சந்தைப்படுத்தல் அமைப்பான Destination Canada நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO), முன்னாள் மத்திய NDP கட்சித் தலைவர் Jagmeet Singh நியமிக்கப்பட பரிசீலிக்கப்பட்டு வருவதாக CTV News செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாத் துறையில் எவ்வித அனுபவமும் இல்லாத Jagmeet Singh-க்கு ஆண்டுக்கு சுமார் $350,000 சம்பளம் கொண்ட இந்த உயர் பதவி வழங்கப்படவுள்ளதற்கு எதிர்க்கட்சிகளும் சுற்றுலாத் துறை சார்ந்த அதிகாரிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2021 தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் Justin Trudeau தலைமையிலான லிபரல் அரசை Confidence-and-Supply ஒப்பந்தம் மூலம் ஆட்சியில் தக்கவைக்க Jagmeet Singh முக்கிய பங்காற்றினார்.
2017 முதல் 2025 வரை NDP கட்சித் தலைவராகச் செயல்பட்ட அவர், 2025 தேர்தலில் கட்சி சந்தித்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்குத் தகுதியான சில காலங்களிலேயே அவருக்கு இப்பதவி வழங்கப்படவுள்ளது.
இருப்பினும், இந்த நியமனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு Jagmeet Singh தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலளிப்பும் வழங்கப்படவில்லை.
