கனடவாவின் சல்சா திருவிழா : அதிரடியாக ஆதரவை மீளப்பெற்றது BIA நிறுவனம்!

கனடாவின் றொரண்டோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற Salsa on St. Clair கலாச்சாரத் திருவிழாவிற்கு வழங்கி வந்த ஆதரவை Hillcrest Village BIA (Business Improvement Area) அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த July 11 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்த சில வாரங்களிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விழா ஏற்பாட்டாளர்களான TeleLatino Network (TLN) மற்றும் Canadian Salsa Festival அமைப்புகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.

இத்திருவிழா நகரின் எல்லைகளையும் BIA அமைப்பின் கொள்ளளவையும் தாண்டி வளர்ந்துவிட்டதாகவும், உள்ளூர்வாசிகளிடையேயும் வணிகர்களிடையேயும் ஆதரவு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் Shaquan Quashie (25) மற்றும் Cesar Vernaza (20) ஆகிய இருவர் பலியாயினர்.

நகர மேயர் அலுவலகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உறுதியளித்துள்ள நிலையில், விழா தொடர்வதை உறுதிசெய்ய பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles