ஹால்டன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் கும்பல் கைது!

கனடாவின் Greater Toronto Area (GTA) பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனித கடத்தல் வலையமைப்பினால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில், Halton Regional Police வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது.

Project Troubadour என்ற பெயரில் 10 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவுகளைக் பொலிஸார் செவ்வாய்க்கிழமை ஊடகச் சந்திப்பில் வெளியிட்டனர்.

இந்த கடத்தல் வலையமைப்பில் 18 முதல் 34 வயதிற்குட்பட்ட 12 பெண்கள் வரை வணிக ரீதியிலான பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என பொலிஸ் கண்காணிப்பாளர் Dave Costantini எச்சரித்துள்ளார்.

ஜூலை 13 அன்று Mississauga, Oakville மற்றும் Burlington ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 10 சோதனைகளில் 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது மொத்தம் 85 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச்சோதனையின் போது Lamborghini Urus, Mercedes-Benz S550, Mercedes-Benz AMG GT ஆகிய சொகுசு கார்கள், இரு Seadoos படகுகள், $450,000 மதிப்பிலான ஆடம்பர நகைகள் மற்றும் $30,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

முக்கிய சந்தேகநபர்களான Burlington-ஐச் சேர்ந்த Omar “Syph” Brooks (40) மீது 14 குற்றச்சாட்டுகளும், “Coco” மற்றும் “Ivy Love” என அழைக்கப்படும் Michelle Dimarco (33) மீது 9 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் Ontario தவிர British Columbia மற்றும் Alberta ஆகிய மாகாணங்களிலும் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துப்பறிவாளர் Scott Heyerman தெரிவித்துள்ளார்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles