றொரண்டோவிற்கு 50 மி.மீ மழை: வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை!

கிரேட்டர் ரொறன்டோ (GTA) பகுதியில் இரவு வேளையில் 50 மி.மீ வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், றொரண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை (Toronto and Region Conservation Authority – TRCA) வெள்ள எச்சரிக்கையை (Flood Outlook) வெளியிட்டுள்ளது.

இந்த மழைப் பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மி.மீ-க்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆறு, ஏரிகள் மற்றும் கரைகளின் அருகே செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் வெள்ளம் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் பயணிக்க வேண்டாம் என்றும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவசர உதவி மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க TRCA-வின் 416-661-6514 என்ற எண்ணையோ அல்லது 911 என்ற அவசர எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles