கனடாவின் Calgary நகரில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பேச முடியாத 11 வயது சிறுவனான Parker Wells மாயமாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், அவனைக் கண்டுபிடிக்கும் தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 16, 2026 அன்று Connaught Drive N.W. பகுதியில் உள்ள ஒரு பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து Parker Wells காணாமல் போனான்.
அவனைக் கண்டுபிடிக்க டிரோன்கள், சிறப்புப் படைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் Thorncliffe பகுதி முழுவதும் தேடப்பட்டு வருகின்றனர்.
வீடுகளின் பின்பகுதி, கூரைகள், கொட்டகைகள் மற்றும் மறைவிடங்களைச் சோதிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, சிறுவன் காணாமல் போன இரு நாட்களுக்குப் பிறகே Amber Alert விடுக்கப்பட்டதற்குப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாயமாகும் போது உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் Indigo Alert என்ற புதிய அவசர எச்சரிக்கை அமைப்பை உருவாக்கக் கோரி Calgary நகரைச் சேர்ந்த Jennifer Ball என்பவர் மனுவொன்றையும் தொடங்கியுள்ளார்.
