திருடப்பட்ட மதுபானங்கள் கொள்வனவு : உரிமத்தை இழந்த றொரண்டோ பார்!

கனடாவின் West-end Toronto (Etobicoke) பகுதியில் 21 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த Southside Johnny’s Bar and Grill என்ற புகழ்பெற்ற பார், திருடப்பட்ட மதுபானங்களை வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் தனது மதுபான உரிமத்தை (Liquor Licence) இழந்துள்ளது.

Alcohol and Gaming Commission of Ontario (AGCO) நடத்திய விசாரணையில், பாரின் உரிமையாளர் John Theodorakakis மற்றும் மேலாளர் Yasmin Gomes ஆகியோர், அருகில் உள்ள கூடார முகாம்களை (Homeless Encampment) சேர்ந்தவர்களிடம் இருந்து தொடர்ந்து திருடப்பட்ட மதுபானங்களை ரொக்கப் பணத்திற்கு வாங்கியது உறுதியானது.

இதுகுறித்து உரிமையாளர் John Theodorakakis தெரிவிக்கையில், “ஆரம்பத்தில் திருடப்பட்ட பொருட்களை வாங்க மறுத்தபோது, அவர்கள் எனது வாகனத்தை சேதப்படுத்தி, வன்முறையில் ஈடுபட்டனர்.

அதானால், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதியும், அமைதியை நிலைநாட்டவுமே (Keep the peace) வேறு வழியின்றி அவற்றைப் பெற்றேன்” எனக் கூறியுள்ளார்.

எனினும், இது சட்டவிரோதச் செயல் என்பதால், Ontario Licence Appeal Tribunal adjudicator Bruce Stanton, பாரின் மதுபான உரிமத்தை இரத்து செய்யும் AGCO-வின் உத்தரவை உறுதிசெய்துள்ளார்.

இதனால் குறித்த பார் தற்காலிகமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles