மனித கடத்தல்: MS-13 கும்பலைச் சேர்ந்த இருவர் கனடாவில் கைது!

கனடாவில் Greater Toronto Area (GTA) பகுதியில் பெண் ஒருவரை மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் MS-13 (Mara Salvatrucha) கும்பலுடன் தொடர்புடைய இருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாண பொலிஸ் Ontario Provincial Police (OPP) மற்றும் Correctional Service of Canada (CSC) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, ‘Project Mermaid’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் இருந்தவாறே, சட்டவிரோத கைத்தொலைபேசி மூலம் மற்றைய நபருடனும் பாதிக்கப்பட்ட பெண்ணுடனும் தொடர்பு கொண்டு, அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் மூலம் அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்தி பணப் பலன் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Latest Articles