ஹேமில்டனில் Home Depot கடைகளைக் குறிவைத்துத் திருடிய 32 பேர் கைது!

ஹேமில்டன் (Hamilton) நகரில் உள்ள ஹோம் டிப்போ (Home Depot) கடைகளில் இடம்பெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 32 பேரை பொலிஸார் கைது செய்து, 235 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

‘புராஜெக்ட் செக்அவுட்’ (Project Checkout) என்ற பெயரில் நடத்தப்பட்ட 4 மாத விசாரணைக்குப் பிறகே இந்தத் திட்டம் அம்பலமானது.

கடைகளில் இருந்து அதிநவீன கட்டுமானக் கருவிகளைத் திருடி, இணையதளம் வழியாகக் குறைந்த விலைக்கு விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

ஊழியர்கள் தடுக்க முயன்றபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சோதனைகளின் போது, சுமார் 300,000 டாலர் பெறுமதியான திருடப்பட்ட பொருட்கள் மற்றும் 100,000 டாலர் மதிப்புள்ள ஒரு சொகுசு வாகனம் (2021 RAM TRX) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles