கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், Uber காரில் பயணித்த பெண் பயணி ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
திங்கட்கிழமை அதிகாலை 1:30 மணியளவில், எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள தி குயின்ஸ்வே (The Queensway) வீதியில், சவுத் கிங்ஸ்வேக்கு (South Kingsway) மேற்கே பயணித்த Uber கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது காரின் பின் இருக்கையில் பயணித்த பெண் வாடிக்கையாளருக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டிச் சென்ற சாரதி காயங்களின்றி தப்பியுள்ளார்.
வாகனத்தின் அதிவேகக் கட்டுப்பாடு இழப்பே இந்த விபத்துக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்து நடந்த பகுதியான தி குயின்ஸ்வே (The Queensway) வீதியானது சவுத் கிங்ஸ்வே (South Kingsway) மற்றும் பார்க் லான் வீதிக்கு (Park Lawn Road) இடைப்பட்ட பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
