கனடாவின் வடக்கத்திய ஒன்ராறியோ (Northern Ontario) பிராந்தியத்தில் சுமார் 200 காட்டுத் தீக்கள் தீவிரமாக பரவி வருகின்றன.
இதில் 57 தீ விபத்துகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி எரிந்து வருகின்றன.
புகைப் புகா காரணியினாலும், தீயின் தீவிரத்தினாலும் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நெஸ்காந்தகா பர்ஸ்ட் நேஷன் (Neskantaga First Nation) பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தண்டர் பே (Thunder Bay) பகுதியில் தங்குமிட பற்றாக்குறை நிலவுவதால், மக்கள் றொரண்டோ (Toronto) நகரத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
அதேவேளை, வொயிட்வாட்டர் லேக் பர்ஸ்ட் நேஷன் (Whitewater Lake First Nation) சமூகத்தில் வீடுகள், பொருட்கள் மற்றும் அத்தியாவசிய கட்டமைப்பு வசதிகள் காட்டுத் தீயினால் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
தீயணைப்புப் படையினர் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் பெய்த லேசான மழை தீயின் வேகத்தைக் குறைத்திருந்தாலும், சூழ்நிலை சீரடைய தொடர்ச்சியான பலத்த மழை அவசியமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
