கனடாவில் போலி மிரட்டல் கும்பல்களின் வன்முறை – இந்தியாவை தளமாக கொண்ட கும்பல் சிக்கியது!

கனடா, ஒன்ராறியோவின் (Ontario) பிராம்ப்டன் (Brampton) மற்றும் மிசிசாகா (Mississauga) பகுதிகளில், சர்வதேசக் குற்றக் கும்பல்களைப் பார்த்துப் பழகிய போலி மிரட்டல் கும்பல்களின் (Copycat Criminals) வன்முறைகள் அதிகரித்துள்ளதாகப் பிராம்ப்டன் நகர சபை உறுப்பினர் குர்பர்தாப் சிங் தூர் (Gurpartap Singh Toor) தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நள்ளிரவில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதைத் தங்கள் தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களை அச்சுறுத்தி இக்கும்பல் பணம் பறித்து வருகிறது.

கடந்த மே மாதம், தெற்காசிய மற்றும் சீக்கிய சமூகத்தினரை இலக்கு வைத்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாகப் பில் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) 17 பேரைக் கைது செய்தனர்.

மேலும், இந்த வாரத்தில் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் மூன்று குற்றக் குழுக்களைச் சேர்ந்த 24 பேரை RCMP, FBI மற்றும் LAPD ஆகிய அமைப்புகள் இணைந்து கைது செய்துள்ளன.

இவ்வாறான உயர்மட்டக் கைதுகள் இடம்பெற்ற போதிலும், உள்ளூர் மிரட்டல்கள் தொடர்வதால் மக்கள் மத்தியில் அச்சம் நீடித்து வருகின்றது.

 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles