நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்கான நிதி மறுக்கப்பட்டதால் போராட்டம்!

கனடா, ஒன்ராறியோவை (Ontario) சேர்ந்த 37 வயதுடைய அலெக்ஸ் ஷ்வெட் (Alex Shved) என்பவர், நான்காம் கட்ட மெலனோமா (Stage 4 Melanoma) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரைக் காக்க ‘TIL’ (Tumour-Infiltrating Lymphocyte) என்ற அதிநவீன சிகிச்சை தேவைப்படுகிறது.

இந்தச் சிகிச்சையை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மாபிட் புற்றுநோய் மையத்தில் (Moffitt Cancer Center, Florida) பெறுவதற்கு சுமார் 1 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

அதனால், ஒன்ராறியோ அரசிடம் அவர் வெளிநாட்டு மருத்துவக் காப்பீட்டு நிதியுதவி கோரியிருந்தார்.

ஆனால், இந்தச் சிகிச்சைக்கான ‘லிபிலூசெல்’ (lifileucel) மருந்து ஒன்ராறியோவில் தற்பொழுது பொது நிதியுதவிக்கான மறுஆய்வில் (Funding Review) உள்ளதைக் காரணம் காட்டி, மாகாண சுகாதார அமைச்சு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

சிகிச்சைக்கான முழுமையான ஒப்புதல் கிடைக்க பல வருடங்கள் ஆகலாம்.

அதனால், தமக்கு காத்திருக்க நேரமில்லை எனக் கூறும் அலெக்ஸ் ஷ்வெட் (Alex Shved), மாகாண அரசின் இந்த முடிவுக்கு எதிராக தற்பொழுது தீவிர சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

 

Related Articles

Latest Articles