உலகக்கோப்பை எதிரொலி – றொரண்டோவில் கால்பந்து காயங்கள் திடீர் அதிகரிப்பு!

றொரண்டோவில் (Toronto) 2026 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் (FIFA World Cup) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் தொலைக்காட்சிகளில் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தாங்களாகவும் மீண்டும் கால்பந்து விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, நகரில் கால்பந்து தொடர்பான காயங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் 6 கணுக்கால் தசைநார் (Achilles ruptures) பாதிப்புகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

உலகக்கோப்பை ஆர்வத்தால், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென விளையாடத் தொடங்கியதே இந்த காயங்களுக்கு முக்கியக் காரணம்.

வழக்கமாகக் கால்பந்து விளையாட்டில் முழங்கால் (ACL) காயங்களே அதிகம் ஏற்படும் என்பதால், இந்த கணுக்கால் தசைநார் காயங்களின் திடீர் உயர்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், நகரின் யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வொர்க் (University Health Network) மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக இத்தகைய காயங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் போன்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விளையாடத் தூங்குபவர்கள், காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க விளையாடுவதற்கு முன்பாக முறையான உடற்பயிற்சி (Warm up), தசை நீட்சி (Stretching) மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை (Hydrate) உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர் சாகர் தேசாய் (Dr. Sagar Desai) அறிவுறுத்தியுள்ளார்.

Cp24

Related Articles

Latest Articles